
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமம் ஒன்றில் போடப்பட்ட சாலை தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு, பொதுமக்களே போடப்பட்ட தரமற்ற சாலையை கைகளாலேயே பெயர்த்து எடுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் அண்மையில் தார் சாலை ஒன்று போடப்பட்டது. அந்த சாலை மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் சாலையை கைகளாலே பெயர்த்து எடுத்து சாலையின் தரத்தை வெளிப்படுத்தினர். மேலும் தொடர்ந்து அந்த பகுதியில் நடந்து வரும் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய மக்கள் சாலையை தரமாக போட்டு தரும்படி கோரிக்கை வைத்தனர்.
Follow Us