Defamation of Prime Minister in e-mail; Shocked at the investigation of the arrested youth in Thanjavur

Advertisment

பிரதமர் குறித்து அவதூறு பரப்பியதாக தஞ்சாவூரைசேர்ந்த விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற இளைஞரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள்வெளியாகியுள்ளன.

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பூண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35) எம்.காம் படித்துள்ள ஜேம்ஸ் ராஜா சுற்றுச்சூழல் குறித்த முனைவர் பட்டத்திற்கான படிப்பை மேற்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காலை 6 மணி அளவில் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் விசாரணை நடத்தினர். அவரது பெற்றோர்களை வெளியே அனுப்பிவிட்டு கதவை தாழிட்டுவிட்டு ராஜாவிடம் விசாரணை நடைபெற்றது.

பிரதமர் மோடி அலுவலகத்திற்கு இ-மெயிலில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்துக்களைப் பதிவிட்டதாகத்தகவல் வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறுமிகளை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அதை இணையதளங்களில் பதிவேற்றியது தெரிய வந்திருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழும், ஐடி சட்டங்களின் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.