திருமாவளவன் மீதான அவதூறு வழக்கு; ஜூலை 5ம் தேதிக்கு தள்ளி வைப்பு!

Defamation case against Thirumavalavan; Postponed to July 5!

வன்னியர் சங்க மாநிலச் செயலாளராக இருப்பவர் கார்த்தி. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது சேலம் 4வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் கார்த்தி, குணசேகரன் சிவா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து வழக்கை ஜூன் 26 ஆம் தேதி நீதித்துறை நடுவர் யுவராஜ் தள்ளி வைத்தார். அதன்படி, நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கார்த்தி தரப்பில் வழக்கறிஞர்கள் பகத்சிங், குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் வாதம் செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe