தீபாவளியையொட்டி, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயங்க தொடங்கின.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக நவம்பர் 13- ஆம் தேதி வரை மொத்தம் 8,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 3,510 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,247 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.