திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை அருகே உள்ள காவிரிப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள வனப் பகுதியிலிருந்து இரண்டு வயதுடைய பெண் புள்ளிமான் என்.கருப்பம்பட்டி கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்துள்ளது. அந்த மானைக் கண்ட தெரு நாய்கள் அதனைத்துரத்தி கடித்தது. இதனால் மான் அங்கிருந்து ஓடி அப்பகுதியில் உள்ள பூங்காவிற்குள் தஞ்சமடைந்தது. இது குறித்து அங்கிருந்த பணியாளர்கள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன், வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில்சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் சக்திவேல், புள்ளி மானுக்கு சிகிச்சை அளித்தார். அதனைத் தொடர்ந்து மானின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சை அளிக்க வனச்சரக அலுவலகத்திற்குப் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.