/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cop_238.jpg)
விழுப்புரம் மாவட்டம்,வானூர்அருகே உள்ள திருச்சிற்றம்பலம்கூட்ரோடுபகுதியில் அவ்வப்போது திருட்டுத்தனமாக மான் கறி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்குரகசியத்தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வன அலுவலர் திருமலை,பாலசுந்தரம்,வனக்காப்பாளர்பிரபு, கஜேந்திரன் உள்ளிட்டோர் திருச்சிற்றம்பலம்கூட்டுரோடுபகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
நேற்று அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போதுபூத்துறைசாலை வழியாக ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரைமடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அவர் புதுச்சேரி மாநிலம்வில்லியனூர்மூர்த்தி நகரில் குடியிருக்கும் முருகன் என்பதும், இவர்திருவண்ணாமலையில் இருந்துவேட்டையாடப்பட்ட மான் கறியை வரவழைத்து திருச்சிற்றம்பலம்கூட்டுரோடுபகுதியில் ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து முருகன் வைத்திருந்த மான்கறியைப்பறிமுதல் செய்து முருகனையும் கைது செய்து திண்டிவனம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனச்சரக அலுவலர்கள் செல்வி,அஸ்வினிஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குஆஜர்படுத்தினர். முருகனுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)