தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் குவிந்தனர். குறிப்பாக மதுரையிலும் கோவையிலும் அதேபோல் தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் குவிந்தனர். தீபாவளிக்கான பொருட்கள் வாங்கச் சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் குவிந்த மக்கள் கூட்டத்தைப் படத்தில் காணலாம்.
தீபாவளி பர்சேஸ்... கடைவீதிகளில் திரண்ட மக்கள் கூட்டம்!
Advertisment