Advertisment

தீபாவளி பண்டிகை - அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது!

Deepavali festival - Booking of government buses begins!

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

Advertisment

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்குச் சொந்த ஊர் செல்வோருக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மேலும், அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணிக்க ஒரு மாதத்துக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி அன்று வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை எடுத்தால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாகின்றன.

Advertisment

இந்த நிலையில், நவம்பர் 3ஆம் தேதி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று (04/10/2021) தொடங்குகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. TNSTC உள்ளிட்ட அரசு செயலிகளிலும், தனியார் செயலிகளிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

diwali Tamilnadu online booking bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe