/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/deepa tharisanam.jpg)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றபட்ட உள்ளது. இதற்காக அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள், தமிழகத்தின் மிக முக்கிய பிரமுகர்களான உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டும் கோவில் கட்டிடங்களின் மீது அமர்ந்து தீப நிகழ்ச்சிகளை கண்டுகொண்டிருந்தனர். இந்நிலையில் லேசாக பெய்து கொண்டிருந்த மழை திடீரென வலுக்க தொடங்கியது. இதனால் தார்பாய் மற்றும் குடைகளின்கீழ் அமர்ந்திருந்த முக்கிய பிரமுகர்கள் பதறிவிட்டனர். தீபம் ஏற்றும்வரை கோவிலை விட்டு வெளியே செல்லமுடியாது என்பதால் சாதாரண பக்தர்களோடு சேர்ந்து முக்கிய பிரமுகர்களும் மழையில் நனைந்தபடியே தீப நிகழ்ச்சிகளை கண்டனர்.
Follow Us