ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை சுமார் 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்தவர்களிடம் தற்போது குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதான் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஆகியோர் ஆஜரானார்கள். சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி இருந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர் ஆனார். விசாரணை ஆணையத்தில் இவர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.
படங்கள்: எஸ்.பி.சுந்தர்