தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் இன்று. அதனை கொண்டாடும் விதமாக அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.