Skip to main content

என்ன செய்யலாம்? தொண்டர்களிடம் கருத்து கேட்ட ஜெ.தீபா!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட பேருராட்சி, ஊராட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடத்தப்படும் என்கிற அறிவிப்போடு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மீது அபிமானமுள்ள சீனியர்கள் யார் இருந்தாலும் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று நிர்வாகி தீபா அறிவிப்பு கொடுத்திருந்தார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை நிர்ணயம் செய்யும் கூட்டம் என்ற அறிவித்து இருந்ததால் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வேன்களில் வந்து குவிந்தனர். 
 

 

 

இந்த கூட்டத்தின் ஏற்பாடுகளை கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமுருகன் திருமணம மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். 

 

Deepa Party in Karur


 

கூட்டம் அரங்கு நிரம்பி வழிந்தாலும் தீபா என்ன சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலாக காத்து கொண்டிருந்த நேரத்தில் திடீர் என சுட சுட அப்போது தான் அடித்திருந்த கருத்து கேட்பு படிவம் ஒன்று எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அதில் 
 

முதல் கேள்வி - தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? 
 

இரண்டாவது கேள்வி - எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா? 
 

மூன்றாவது கேள்வி - தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என்று படிவம் ஒன்று வழங்கப்பட்டது. 
 

இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். 
 

கருத்து படிவம் பூர்த்தி செய்தவர்களிடம் பேசிய போது, 

இதில் முதல் இரண்டு கேள்விகளுக்கு கட்சியினர் இடையே எந்த பதிலும் இல்லை ஆனால் மூன்றாவது கேள்வியை வாசிக்கும் போது மட்டும் அங்கிருந்தவர்களிடையே பெரிய கைதட்டலுடன் கூடய ஆரவாரம் எழுந்தது. அது அடங்குவதற்கே பல நிமிடம் பிடித்தது. இதையே தான் அந்த கருத்து படிவத்திலும் எதிரொலித்து இருக்கும் என்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினர் மகாலிங்கம் என்பவர். பின்னர் கூட்டத்தில் பேசிய முக்கிய அமைப்பாளர்கள் பலரும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

 

Deepa Party in Karur


 

பின்னர் கடைசியாக பேசிய ஜெ.தீபா இது வரை எந்த கூட்டத்திலும் இல்லாதா அளவிற்கு 1 மணிநேரம் பேசினார்.
 

அதில் அவர் கூறியதாவது, 

ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தெண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் சகித்து கொள்கின்றனர்.


 

Deepa Party in Karur


 

இதை மாற்றுவது தொண்டர்களாகிய உங்கள் கையிலும், மக்கள் கையிலும் உள்ளது. தீய எண்ணம் உடையவர்களிடம் இருந்து கழகத்தை மீட்க வேண்டும். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். தூத்துக்குடி துப்பாக்கி சூடும் நடந்திருக்காது.

இன்றைக்கு நடந்து கருத்து கூட்டம் போன்று தமிழகம் முழவதும் மாவட்டம் தோறும் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை கேட்டு நான் நடந்து கொள்கிறேன்.

 

 


பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர்.

இது தவறு. நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலியல் புகார்; பாஜக மாவட்ட முன்னாள் செயலாளர் கைது!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
dindigul palani bjp district secretary issue

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரான மகுடீஸ்வரன் காலை உணவுத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதாக கூறி அங்கு வந்துள்ளார்.

அச்சமயத்தில் மகுடீஸ்வரன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளரிடம் எத்தனை குழந்தைகளுக்கு சமைக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு அந்த பெண் 35 பேருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து நான் சமையல் அறையை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து, சமையல் அறைக்கு அழைத்து சென்று இருக்கிறார். அப்போது திடீரென சமையல் ரூமின் கதவை அடைத்த போது அந்த பெண் ஒருங்கிணைப்பாளர் நான் ரூமை திறந்து தான் வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மது போதையில் இருந்த மகுடீஸ்வரன் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதைக்கண்டு பாஜக மாவட்ட செயலாளார் மகுடீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். 

இது சம்பந்தமாக காலை உணவுத்திட்ட பெண் ஒருங்கிணைப்பாளர் சாமிநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் மகுடீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த விசயம் காட்டுத்தீ போல் பாஜக மாநில பொறுப்பாளர்களுக்கும் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தெரியவே மகுடீஸ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பதாகவும், கட்சியினர் யாரும் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும், மாவட்ட தலைவர் கனகராஜ்  உடனடியாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர். பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

தேனியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Chief Minister M.K. Stalin's campaign In Theni

தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல் அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சுற்றப்பயணம் செய்து, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் நாளை (புதன் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதனையொட்டி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இதில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மதுரையில் இருந்து தேனி வருகிறார். தேனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்குகிறார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செல்லும் ஊர்களில் எல்லாம் காலை நேரத்தில் நடைபயிற்சி செய்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி தேனியிலும் அவர் நாளை காலையில் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் மாலையில் லட்சுமிபுரத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக லட்சுமிபுரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது ஏராளமான தொண்டர்கள் அமருவதற்காக பொதுக்கூட்ட திடல் தயார் செய்யும் பணிகள் கடந்த சில  நாட்களாக மும்முரமாக நடந்து வருகின்றது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பிரம்மாண்ட கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. 

Chief Minister M.K. Stalin's campaign In Theni

இந்த பொதுக்கூட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 12 தொகுதிகளில் இருந்தும் கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என ஒரு லட்சம் பேரை திரட்ட இருக்கிறார்கள். அதற்கான பணியில் தொகுதி பொறுப்பாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட பொறுப்பாளர்களும் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.