Advertisment

வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி தீபா, தீபக் மனு!

Deepa, Deepak petition to hand over the keys of the Vedha station!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றயது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார்.

Advertisment

அதில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர், “போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைப்பது பற்றி தமிழ்நாடு அரசு வழக்கறிஞருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

chennai high court Deepa District Collector poes garden
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe