Advertisment

பத்திரப் பதிவு சேவைக் கட்டணம் இன்று முதல் உயர்வு

Advertisment

Deed registration service fee hiked from today

பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்குக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத்தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

Advertisment

தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “ரசீது ஆவணத்திற்குப் பதிவுக் கட்டணம் 20 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச முத்திரைத் தீர்வைக் கட்டணம் 25,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கானக் கட்டணம் 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்கிறது. செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான அதிகபட்ச பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, அனைத்து பத்திரப் பதிவு சேவைக் கட்டண உயர்வு இன்று (ஜூலை 10) முதல் அமலுக்கு வர உள்ளது. பதிவுத் துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கானக் கட்டணம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருத்தம் செய்யப்பட்டு தற்போதுஉயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DOCUMENT registration
இதையும் படியுங்கள்
Subscribe