ADVERTISEMENT

பத்திரப் பதிவு அலுவலக முறைகேடுகள்; பதாகை வைத்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு குவியும் பாராட்டு

10:00 PM Oct 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே உள்ளது குமராட்சி ஒன்றியம். இங்கு 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணியாற்றும் பதிவாளர் பெயரைப் பயன்படுத்தி பத்திரம் எழுதுபவர்கள், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புரோக்கர்களாக செயல்படுபவர்கள் பொதுமக்களிடம் அதிகமாகப் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமராட்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யும்போது அரசுக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும், அதேபோல் மற்ற பணிக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பது குறித்தும் அதிகமாகப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்ற தகவல்களுடன் குமராட்சி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் பதாகை ஒன்று வைத்துள்ளார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிகப் பணம் கொடுத்ததை எண்ணி அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பணம் கொடுத்தவர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, இதில் எங்களுக்கு கொஞ்சம் தான் மீதி பணம் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொடுத்து விடுவோம் என்கின்றனர். எனவே இந்த பேனர் வைத்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT