Advertisment

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கரோனா தேவி சிலை பிரதிஷ்டை!

 Dedication of Corona Devi statue on behalf of Coimbatore Kamatsipuri Aadeenam!

Advertisment

இன்று கரோனா வைரஸ் என்னும் கிருமியால் மனித வாழ்க்கையே சீர்குலைந்து விட்டது. பல்லாண்டுகளுக்கு முன்பு காலரா, பிளேக் போன்ற நோய்கள் பரவிய சமயத்தில் ''திக்கற்றவர்க்கு தெய்வமே துணை'' என்ற வாக்கின்படி கிராமங்களில் மாரியம்மன்,மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். வேப்பிலை கும்பங்களும், நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம் பிற்காலத்தில் கோவிலாக மாறியது.

இதற்காக சாஸ்திரங்கள் எதுவும் எழுதப்படாவிட்டாலும்மக்களே ஏற்படுத்திய வழிபாடாகும். அதுபோல இன்று கரோனா கிருமி பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் கரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகாயாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாகத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை. ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்றும் பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன்,மாகாளியம்மன் இருப்பது போல இந்த கரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது என்கின்றனர் ஆலயத்தரப்பினர்.

Advertisment

அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ளும் படியும், முக கவசம் தனிமனித இடைவெளி, ஆரோக்கிய உணவு ஆகியன அவசியம் என்றும் தெரிவித்தனர். ஆதீனத்தின் மூலம் செயல்படும் உலக சமாதான தெய்வீகப் பேரவை சார்பாக கிராமங்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசங்கள், மதிய உணவு ஆகியன தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

temple coronavirus kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe