Decorative vehicle on behalf of Tamil Nadu Govt

Advertisment

டெல்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாஅணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த ஊர்தி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டு செல்லப்பட இருக்கும் அலங்கார ஊர்தியில் ஜனநாயகத்தின் அடையாளமான 'குடைஓலை' முறை காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் ஊர்தியில் காட்சிகள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' எனும் தலைப்பில் நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த காட்சிகள் ஊர்தியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அனைவருக்குமான நீதி' என்ற தலைப்பில் மனுநீதி சோழன் குறித்த அலங்கார ஊர்தியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.