இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கரோனா தடுப்புஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்முன் உரையாற்றுகையில்,
"திண்டுக்கல்லில் கரோனாபாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. சிறப்பான பணியை மேற்கொண்ட ஆட்சியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கரோனாவைகட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுரையை கடைபிடித்தால் தான் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் வரை விலையில்லா அரிசி வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக திண்டுக்கல்லில்42 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, கால்நடை துறை கட்டிடங்களையும்திறந்துவைத்தார்.