தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசின் தொழிற்கொள்கை, புதிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஒப்புதல் அளிப்பது, சென்னையில் அமையவுள்ள புதிய விமான நிலையம், குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து தமிழக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறுமுக சாமி அறிக்கை தொடர்பாகவும் அதில் மேல் நடவடிக்கை எடுத்து சட்டப்பேரவையில் அந்த அறிக்கையை தாக்கல் செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.