நூல் விலை உயர்வு காரணமாக, பின்னலாடைகளின் விலையையும் 15% உயர்த்தி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நூல் விலை உயர்வு காரணமாக, பின்னலாடை உற்பத்தி தொழில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், 15% விலையை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நூல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும், பருத்திப் பதுக்கலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.