Advertisment

'டிசம்பர் 6 பாஜகவுக்கு புனித நாள்'- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

'December 6 is a holy day for the BJP' - Interview with Pon. Radhakrishnan

Advertisment

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

பசும்பொன்னில் 113வது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு வணங்குவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. தன்னலமற்ற தேசபக்தியும், ஆன்மீக கொண்டவராக இருந்தவர் தேவர் திருமகனார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நேற்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வ வழிபாடு இல்லாவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டாலினுக்கு இறைவழிப்பாட்டு பழக்கம்இல்லாவிட்டாலும் பரவாயில்லை தெய்வ நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது. விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின் மறுத்திருக்கலாம், அதை விடுத்து உதாசீனம் படுத்த தேவையில்லை. பெரியாரை விட கடவுள் மறுப்பை கொண்டவர் வேறுயாருமில்லை. அவரே ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திருநீறை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பொன்னில் நிகழ்ந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.

Advertisment

மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு தமிழக ஆளுநர் உத்தரவு வழங்கியது பாராட்டதக்கது. டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள். அந்ததினம் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளோம். வேல் யாத்திரையை எதிர்ப்பவர்களுக்கு அச்சம் வரத்தான் செய்யும். நாங்கள் தண்டிக்கப்போவதில்லை.நளினி, பேரறிவாளன் 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்.

ரஜினி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பாதிக்கும் கட்சியினர் அவதூறாக அறிக்கையை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இரண்டு இலக்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.

Pon Radhakrishnan
இதையும் படியுங்கள்
Subscribe