Skip to main content

'டிசம்பர் 6 பாஜகவுக்கு புனித நாள்'- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 01/11/2020 | Edited on 02/11/2020
'December 6 is a holy day for the BJP' - Interview with Pon. Radhakrishnan

 

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,


பசும்பொன்னில் 113வது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு வணங்குவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. தன்னலமற்ற தேசபக்தியும், ஆன்மீக கொண்டவராக இருந்தவர் தேவர் திருமகனார். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு நேற்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வ வழிபாடு இல்லாவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டாலினுக்கு இறைவழிப்பாட்டு பழக்கம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தெய்வ நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது. விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின் மறுத்திருக்கலாம், அதை விடுத்து உதாசீனம் படுத்த தேவையில்லை. பெரியாரை விட கடவுள் மறுப்பை கொண்டவர் வேறுயாருமில்லை. அவரே ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திருநீறை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பொன்னில் நிகழ்ந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு தமிழக ஆளுநர் உத்தரவு வழங்கியது பாராட்டதக்கது. டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள். அந்த தினம் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளோம். வேல் யாத்திரையை எதிர்ப்பவர்களுக்கு அச்சம் வரத்தான் செய்யும். நாங்கள் தண்டிக்கப்போவதில்லை. நளினி, பேரறிவாளன் 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்.

ரஜினி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகை பாதிக்கும் கட்சியினர் அவதூறாக அறிக்கையை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இரண்டு இலக்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.