Advertisment

'ஏமாற்றுகின்ற திமுக ஆட்சி வீழ்த்தப்படும்'-டி.டி.வி.தினகரன் பேட்டி

'The deceiving DMK regime will be overthrown' - TTV Dinakaran interview

அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பாஜக கூட்டணியில் இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் பாஜகவின் உடைய கொள்கை வேறு எங்களுடைய நிலைப்பாடு வேறு. மக்கள் விரும்பாத பட்சத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடத்தில் விமான நிலையம் வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. சர்வதேச விமான நிலையம் வர வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது எங்கே வர வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் சரியாக முடிவு செய்ய வேண்டும். முதல்வரே நேரில் சென்று அந்த மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதை விட்டுவிட்டு அங்கு அடக்குமுறையை நடத்துவதும் அங்கு போவோர்களை தடுத்து நிறுத்துவதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.

Advertisment

உறுதியாக மக்கள் விரோத, திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றுகின்ற திமுக ஆட்சி வீழ்த்தப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஏற்கனவே வேங்கை வயல் விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு சிறப்புப் புலனாய்வுப் படையெல்லாம் வைத்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறார்கள். அதனால் சிபிஐ விசாரணை அமைத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்'' என்றார்.

Advertisment
paranthur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe