Advertisment

டிச. 17ம் தேதி! 5 ரூபாயில் சென்னையை சுற்றலாம்! 

Dec. On the 17th! You can travel around Chennai in 5 rupees!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் நாளை (17-ம் தேதி) பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.

Advertisment

இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிகளவில் பயணிக்க இயலாத காரணத்தினால், மீண்டும் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையை பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம்.

இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.

பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe