
வேலூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியானநபர் ஒருவரின்உடல் எரிந்து சிதைந்த நிலையில் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் கூடநகரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து வசித்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான அசோக்ஊரைச் சுற்றி பல இடங்களில் இதற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அசோக்கின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த அவரது மனைவி அவருடன் சண்டையிட்டுவிட்டுஅசோக்கைப்பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனியாக வசித்து வந்த அசோக்கின்உடல் வீட்டுக்குப் பின்புறம் காலி இடத்தில் எரிந்த நிலையில் கிடந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அசோகா ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடனாளியாக ஆனதால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் மோதல்கள் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)