Advertisment

கந்து வட்டி கொடுமை! இளைஞர் தற்கொலை! 

Debt issue youth passed away after recording video

கள்ளக்குறிச்சி மாவட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் என்கிற தினேஷ்(21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின்பைனான்ஸ்கம்பெனியில்கடந்த ஐந்துஆண்டுகளாககந்துவட்டிக்குபணம் கொடுத்து வசூல் செய்து கொடுக்கும்பணியில் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், நேற்று திடீரென்று தினேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளபோவதாகதனதுசெல்போனில்வீடியோமற்றும்ஆடியோவில்பேசி விட்டு விஷம் குடித்துவிட்டு தென் கீரனூர் பகுதியில் உள்ளசீனுஎன்பவரது பாசனகிணற்றில்குதித்துதற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

இது குறித்த பரபரப்பு தகவல், நகரம் முழுவதும் பரவியது. கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்குதகவல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பிராஜலட்சுமி,இன்ஸ்பெக்டர்ரவிச்சந்திரன்மற்றும்போலீசார்சம்பவஇடத்திற்குசென்று கிணற்றிலிருந்துதினேஷின்உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

தற்கொலை செய்து கொண்ட தினேஷ்,வீடியோவில்பேசியுள்ள தகவலில், ‘நான், வேலை செய்து வந்தபைனான்ஸ்கம்பெனிஉரிமையாளர் என்னைமனரீதியாகதுன்புறுத்தி வந்தார். நான் ஒருவரிடம் கடன் பெற்று இருந்தேன். அதற்காக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைவட்டிக்குபெற்றுசெல்போன்மூலம் பரிவர்த்தனை செய்து கொடுத்து விட்டேன். அந்த பணத்திற்கு அதற்கு மீட்டர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்ததோடு என்னைமனரீதியாகதொந்தரவு செய்து வந்தார். அதனால் என்னால் வாழ முடியாமல் விஷம் குடித்துஒன்றரைமணி நேரம் ஆகிறது. அதோடுதென்கீரனூர்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் ஓரமாகபைக்கைநிறுத்திவிட்டு கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனது அம்மா, பாட்டி, சித்தி ஆகியோர் என்னை மன்னிக்க வேண்டும்’ என தினேஷ் பேசியவீடியோஆடியோவில்பதிவாகியிருந்தது.

இது குறித்து கள்ளக்குறிச்சிபோலீசார்விசாரணை செய்துதினேஷின்தற்கொலைக்குகாரணமான கள்ளக்குறிச்சி அண்ணா நகர்பகுதியைசேர்ந்தபன்னீர்செல்வம் மற்றும்பொரசாக்குறிச்சிகிராமத்தைசேர்ந்த வேல்முருகன் ஆகியோர் மீதுவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தினேஷ் அவர்களிடம் கடன் பெற்ற வகையில் வட்டியும் அசலும் சேர்த்து ஏழரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் கந்து வட்டி, மீட்டர் வட்டி என வட்டிக்கு மேல் வட்டி போட்டு பணம் கொடுத்த இருவரும் ஒரு கோடி ரூபாய் பணம் தர வேண்டும் எனதினேஷைமிரட்டி தொந்தரவு செய்து வந்துள்ளனர். அதோடு ஒரு கோடி பணம் தரவில்லை என்றால் பெரும் பிரச்சனை உருவாகும் என்று கடுமையாக மிரட்டியதன் காரணமாகவே மிகுந்தமனவேதனையில் இருந்துவந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவர்தற்கொலைக்குகாரணமானவர்கள் இப்போதுதலைமறைவாகியுள்ளதாககூறப்படுகிறது. அவர்களைபோலீசார்தீவிரமாகதேடி வருகின்றனர்.

police kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe