Advertisment

கந்துவட்டி கடனுக்காக மூதாட்டி மீது தாக்குதல்..  

Debt issue old lady got trouble in karur

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுசீலா (67). சுசிலாவின் ஒரே மகன் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (50) என்பவரிடமிருந்து 10% வட்டிக்கு ரூ.10,000கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்காக மூதாட்டி சுசீலா ரூ.20,000தொகையை சரியாக வட்டியுடன் சேர்த்து திருப்பி அளித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வகுமார் மூதாட்டி சுசீலா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கூடுதல் தொகையாக ரூ.10,000கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மூதாட்டி சுசீலா அளித்த புகாரின் பேரில் கந்து வட்டி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செல்வகுமார் மீது கரூர் மாநகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe