திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாசன் என்பவரது மகன் அபிநயன் நண்பர்களோடு சேர்ந்த காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக மோகன்தாசன் நீரில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது நண்பர்கள், அங்கு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து மோகன்தாசனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாமல் தவித்துள்ளனர். அதற்குள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கம்பரசம்பேட்டை தடுப்பணையில் மோகன்தாசன் உடல் ஒதுங்கியதையடுத்து தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டனர். இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.