Advertisment

இளைஞர் சாகுல் ஹமீதின் காவல் நிலைய மரணம்-சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்

lock up

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக பொதுமக்களால் பிடித்து கொடுக்கப்பட்ட சாகுல் ஹமீது (19) என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.

Advertisment

கோவை பிரஸ் கிளம்பில் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பில் உள்ள பி.யு.சி.எல். மாநில இணை செயலாளர் .சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்த மாதம் 22 ஆம் தேதி பொதுமக்கள் பிடித்து கொடுக்கும் போது நல்ல முறையில் இருந்த சாகுல் அமீது, கைதான இரவு முழுவதும் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் உயிரிழந்ததற்கு எண்ணற்ற சான்றுகள் உண்மை அறியும் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இந்த மரணம் தொடர்பாக சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பொன்ராஜ், காவல் நிலைய அதிகாரிகள் மீது பணி இடைநீக்கம் உட்பட துறை சார்ந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisment

சாகுல் அமீதின் காவல் நிலைய இறப்பு வழக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176(1A)ன் கீழ் தனி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்தவும், தேசிய மனித உரிமை ஆணையமும் இந்த வழக்கை தொடர் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் தான் சாகுல் அமீது உயிரிழப்பு நடத்ததாக காவல்துறை வழக்கை ஜோடிக்க முற்படுவதுடன், அதற்காக பொதுமக்களை மிரட்டுவது, பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் பேரம் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

உதவி ஆய்வாளர் பொன்ராஜின் முந்தைய செயல்பாடுகள் மூலம் இந்த விவகாரத்தை மதரீதியாக அணுகியுள்ளார் என்ற சந்தேகம் எழுவதாக கூறியவர், தற்போது உதவி ஆய்வாளர் பொன்ராஜ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

-அருள்

The death of youth Sakhul Hameedin's death - the assertion of the CBI investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe