Skip to main content

பள்ளி கழிவறையில் இறந்த மாணவிக்கு நியாயம் கேட்டு போராடியவர்களுக்கு தடியடி:காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

காட்டுமன்னார்கோவில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்துகிடந்தார். அதனை தொடர்ந்து மாணவியின் உடல் விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

protest

 

இதனை தொடர்ந்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்தொழி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியினர் கிராம பொதுமக்களுடன் வியாழக்கிழமை  சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன், சத்துணவு பொறுப்பாளர் விக்டர் ஆகிய இருவரும் முன்னுக்கு பின் தகவல்களை கூறியுள்ளனர்.

 

protest

 

பின்னர் மாணவி சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உடற்கூறு ஆய்வு முடித்து வந்த மாணவியின் உடலை வைத்துக்கொண்டு மெய்யாத்தூர் கிராமபொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் காட்டுமன்னார்கோவில் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தவர்த்தாம்பட்டு என்ற இடத்தில் சாலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

இதனால் ஒரு மணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் போராட்டத்தால் ஆத்திரம் அடைந்த  சேத்தியதோப்பு காவல்துறை  துணைகண்காணிப்பாளர் ஜவகர்லால்நேரு தலைமையிலான காவல்துறையினர் போராட்டகார்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தடியடி நடத்தினார். 

 

 

இதனால் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் முதியவர்கள் செய்வதறியாது சிதறி ஓடினர். இதில் சிலபேர் கிழே விழுந்ததால் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட அந்த கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குமராட்சி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.