dindigul

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ரோட்டில் இருக்கும் பிரசன்னா தனியார் நூற்பாலையில் நாகம்பட்டியைச் சேர்ந்த சின்ன கவுண்டர் மகன் காளியப்பன் காவலாளியாக வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு பணிக்கு சென்ற காளியப்பன் அதிகாலை 5 மணி அளவில் தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்க முன்பே உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

.

இதுபற்றி காளியப்பன் மகன் முருக பாண்டியிடம் கேட்டபோது...

அந்த ‌தனியார் நூற்பாலை நிர்வாகமோ காலையில் கழிப்பறை செல்லும்போது எனது அப்பா கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாகவும் உயிர் உள்ள நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எனது தந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கழிவறை சென்றபோது கீழே விழுந்ததில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும், கண்டிப்பாக எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் கூறினார். இது சம்பந்தமாக வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.