Advertisment

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; பிரபல வியாபாரி கைது

 dealer who kept liquor in his house was arrested

திருவண்ணாமலை மாவட்டம் பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தஏழுமலை,திருவண்ணாமலை மாவட்டம் களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தமோகன்தாஸ்,இருவரும் பிரபலமான சாராய வியாபாரிகள். ஏழுமலை மோகன்தாஸிற்கு புதுச்சேரியிலிருந்து சாராய கேன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

Advertisment

திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கலஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டில்மார்ச் 15 ஆம் தேதி இரவு 8 பேர் அடங்கிய போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

சோதனையில் வீட்டில் சாராய கேன்கள் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மோகன்தாஸை கைது செய்து அவர் மறைத்து வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன்கள் அடங்கிய 4,375 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், புதுச்சேரியில் இருந்து மோகன்தாஸிற்கு சாராயம் வாங்கிக் கொடுத்த ஏழுமலை தப்பிச் சென்றதால் அவரை தீவிரமாகத்தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 4,375 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested liquor police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe