கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வட பொன்பரப்பி அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள காப்புக்காட்டில் ராய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் மகன் வெங்கடேசன் என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அருகாமையில் உள்ள வடபொன்பரப்பி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்து காவல்துறையினர் வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்டம் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நடந்தது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.