Skip to main content

இறந்தவரின் உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்கு வழங்கிய குடும்பம்!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
dead body


தஞ்சை மாவட்டம், கும்பகோணம் புளியம்பேட்டை ராஜலெட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கும்பகோணத்தில் அச்சகம் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி சரோஜா மற்றும் மூன்று மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது.

இந்தநிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன் வயது முதிர்வின் காரணமாக உடல் தலர்ந்து வீட்டில் படுத்த படுக்கையான முருகேசன் நேற்று காலை உயிரிழந்தார். "தான் இறந்துவிட்டால் எனது உடலை அடக்கம் செய்யக்கூடாது மாறாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும், எனது உடலை வருங்கால மாணவர்கள் ஆராட்சி செய்து, மக்களுக்கு பயனுள்ள மருத்துவராக வருவார்கள்", என கூறியிருந்தார்.

அதன்படி, முருகேசன் இறந்ததும் ஸ்டார் மனிதநேய சங்கமத்தின் தலைவர் எஸ்.எம்.மார்ட்டின் என்பவரிடம் தெரியப்படுத்தினர். அதன்பிறகு முருகேசனின் உடல் இன்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் முருகேசனின் மகன்கள், மருத்துவக்கல்லூரியின் மெய்யியல் துறை பேராசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து எஸ்.எம்.மார்ட்டின் கூறுகையில், "கும்பகோணத்தில் கு.ரா.கிருஷ்ணமூர்த்தி எனும் எழுத்தாளர் இறந்தபோது அவரது உடல் மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்போது முருகேசன் உள்பட 15 பேர் உடல் தானம் வழங்குவதாக உறுதியளித்தனர். அந்த 15 பேரில் முருகேசனின் மனைவி சரோஜாவும் அடங்குவார்.

முருகேசனின் எண்ணத்தின்படி அவர் இறந்ததும், அவரது உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக வழங்கப்பட்டது". என்றார்.
 
- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் வன்முறை; வெளியான மாணவர்களின் சடலங்கள் புகைப்படம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

student photos of manipur issue

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.

 

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கான்போபி மாவட்டத்தில் மர்ம  நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதையடுத்து, அடுத்த நாளே சுராந்தபூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொண்ட தாக்குதலில் துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் பலியானார். இந்த நிலையில், கலவரம் காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை, சமீபத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைthதளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.  இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மணிப்பூர் மாநில அரசு உறுதியளித்துள்ளது.

 

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரு மாணவர்களின் சடலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், ஜூலை மாதம் காணாமல் போன அந்த மாணவர்கள் ஹேம்ஜித் (20), மற்றும் லிந்தோய்ங்கம்பி (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில மக்களின் விருப்பப்படி இந்த வழக்கு ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு மாணவர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொடுங்குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு, பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி சடலமாக மீட்பு

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Recovery corpse mentally ill old lady

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஆவணிப்பூரை சேர்ந்தவர் அப்பாவு. இவரது மனைவி மல்லிகா(65). இருபது ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகாவின் கணவர் அப்பாவு இறந்து போனார். அதன்பின் தனது மூன்று சகோதரர்களுடன் மல்லிகா அதே ஊரில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட மல்லிகா அப்பகுதியிலேயே சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று(29.3.2022) காலை ஊருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் மல்லிகா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். வயல் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள் மல்லிகாவின் சடலத்தைப் பார்த்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மல்லிகாவின் சடலம் அருகே தூங்கிக் கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிறு நகரி என்ற ஊரைச் சேர்ந்த பார்த்திபன்(37) என்பது தெரியவந்தது.

 

தனது சொந்த வேலையாக திண்டிவனம் வந்த பார்த்திபன் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார். அப்போது மனநிலை பாதித்த மல்லிகா பார்த்திபனிடம் இருந்து மது வாங்கி குடித்துள்ளார். மது குடித்த பார்த்திபன் போதையில் அதே இடத்தில் படுத்து தூங்கி விட்டதாக கூறுகிறார். ஆனால் மல்லிகாவின் உறவினர்கள் மதுபோதையில் பார்த்திபன் மல்லிகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்த்திபனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த வளத்தி போலீசார் மல்லிகாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதித்தவர் சடலமாக மீட்கப்பட்டது அவரது அருகில் ஒரு இளைஞர் போதையில் படுத்து இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.