Advertisment

கடலூரில் நடைபெற்ற உழவர்களுக்கான ஒரு நாள் கண்டுணர்வு சுற்றுலா

A day trip tour for farmers held in Cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், முருகன்குடியில் 28.01.2022 அன்று காலை 10 மணியளவில் நல்லூர் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை மற்றும் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் உழவர்களுக்கு இயற்கை பண்ணையம் பற்றிய பயிற்சி, ஸ்ரீமுஷ்ணம் வட்டாரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டார உழவர்களுக்கு ஒருநாள் கண்டுணர்வு சுற்றுலாவாக அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் (ATMA) ராஜவேல், ஸ்ரீமுஷ்ணம் வட்டாரம் மற்றும் சந்தானகிருஷ்ணன் கலைவாணன் காட்டுமன்னார்கோவில் வட்டாரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

A day trip tour for farmers held in Cuddalore

Advertisment

இந்தப் பயிற்சியில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கரும்புகண்ணதாசன், அமைப்பாளர் முருகன்குடி முருகன், சின்ன கொசப்பள்ளம் எழில்வேந்தன், இறையூர் கணேசன், கார்த்திகேயன் மற்றும் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் தங்களின் அனுபவங்கள் மற்றும்இயற்கை இடு பொருட்களான பஞ்சகாவியம், பூச்சிவிரட்டி, அமுதக் கரைசல் தயாரிப்பு பற்றி பயிற்சி அளித்தனர்.

செந்தமிழ் மகளிர் சுய உதவிக் குழு சார்பில் விற்பனைக்காக மாப்பிள்ளை சம்பா அவல், கருப்புகவுனி அவல், முளைகட்டிய சத்து மாவு மற்றும் நாட்டுச்சர்க்கரை ஆகியவை வைக்கப்பட்டன. இயற்கைவிவசாயம் செய்யும் உழவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

Cuddalore Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe