138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தினமும் ஒவ்வொரு வகையான போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள்.
Advertisment



இன்று அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் பிரதமர் மோடி தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முற்றிலுமாக ஏற்காமல், தமிழக விவசாயிகளை காலால் எட்டி உதைத்து வீதியில் உருள வைத்துவிட்டார் என்ற போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
Advertisment

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்கு அழிந்துவிட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவில்லை, எந்த ஒரு வறட்சி நிவாரணமும் வழங்கவில்லை, விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்கவில்லை, இந்தியாவில் உள்ள நதிகளை இணைத்து காவிரியில் தண்ணீர் தரவில்லை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவில்லை, கதிராமங்களம், நெடுவாசல், நல்லாண்டர் கொல்லை போன்ற ஊர்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கும் ONGC நிறுவனத்தை அகற்றவில்லை போன்ற கோரிக்கைகளை பிரதமர் மோடி தமிழக விவசாயிகளுக்கு செய்துதராததால், தமிழக விவசாயிகளை காலால் எட்டி உதைத்து வீதியில் உருள வைத்துவிட்டார் என்ற நூதன போராட்டம் நடத்துகிறார்கள் அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்.