Advertisment

"அடுத்து யார்? என்ற கேள்வி எழுந்த போது சாம்பலில்..."- ஜோதிமணி எம்.பி.!

.

Advertisment

நாட்டின் மிகச்சிறப்பாகச் செயல்படும் சிறந்த முதலமைச்சர் யார் என்பது குறித்து ஐஏஎன்எஸ் மற்றும் சிவோட்டர்ஸ் (IANS-CVoter Survey) இணைந்து சர்வே ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், நாட்டின் மிகச்சிறப்பாகச் செயல்படும் முதலமைச்சராக சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பகேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் மிகச் சிறப்பாகச் செயல்படும் முதலமைச்சர், சத்தீஸ்கர் காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பகேல். காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நக்சல்கள் கொடூரமாக படுகொலை செய்தனர். அதை பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அடுத்து யார்? என்ற கேள்வி எழுந்த போது சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்தது போல் எழுந்தவர்தான் பூபேஷ் பகேல்.

அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை உருத்தெரியாமல் ஆக்கினார். இன்று வரை ஆர் எஸ் எஸ்., பா.ஜ.க.விற்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர். முதலமைச்சர் ஆனபிறகு 15 ஆண்டுக்காலம் பா.ஜ.க.வால் சிதைக்கப்பட்ட மாநிலத்தில், ஆட்சியையும் திறம்பட நடத்திக் கொண்டு, கட்சிக்காக ஓடி ஓடி உழைப்பவர். அவரது சிறப்பான பணி தொடரட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tweets MP jothimani congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe