Advertisment

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

nn

Advertisment

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

muslims ramadan
இதையும் படியுங்கள்
Subscribe