10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்க நாளை மறுநாள் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றி ஆலோசிக்க ஜூலை 8(நாளை மறுநாள்) அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக செய்தியாளர்களை சந்திப்பின் போது அவர்தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்என முதல்வர் எடப்பாடி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் திங்கள் கிழமை நடைபெற இருக்கிறது.