(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகத்திற்கு 7-ஆம் தேதி ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில்வரும் 7-ஆம்தேதி முதல் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் வரும் 5-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் புதிதாகஉருவாக இருக்கும்காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பின்னர்புயலாக மாறும். அதேபோல் வரும் 8-ஆம் தேதி மற்றோரு காற்றழுத்த தாழ்வுபகுதி தென்மேற்கு வாங்க கடலில் உருவாகும் எனவும் இதனால்தமிழகம் மற்றும் கேரளாவிற்குதொடர்ந்து 5 நாட்கள்கனமழைக்கும், மிக கனமழைக்குவாய்ப்பிருப்பப்பதால் தமிழகத்திற்கு7-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.