
ரூபாய் 50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே அதிரடியாக சோதனை நடத்தியிருந்தனர். பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றிருந்தது. ஆனால் அன்றைய தினம் வீட்டின் ஒரு அறையில் மட்டும் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான இல்லத்தில் அந்த குறிப்பிட்ட ஒரு அறையில் சிபிஐயை சேர்ந்த 7 அதிகாரிகள் சுமார் 3 மணிநேரம் சோதனை நடத்தினர். இன்று மலை அந்த சோதனையானது நிறைவு பெற்றது.
இந்நிலையில் இன்று சிபிஐ சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் கார்த்திக் சிதம்பரத்தின்மகளின் ஐ-பேட், மடிக்கணினியை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். சிபிஐ இந்த நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் எனவும் கார்த்திக் சிதம்பரத்தின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us