Advertisment

அப்பாவின் தொந்தரவால் வீட்டை விட்டு வெளியேறிய மகள்!

The daughter who left home because of her father's inappropriate behavior

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமத்தில் 15 வயது மாணவி கடந்த 2ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் மாணவி அவருடைய உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் பெறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

Advertisment

அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மின்வாரியத்தில் பணியாற்றும் மாணவியின் தந்தை மாணவியிடம் தவறாக நடந்ததாகவும் அதனால் வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு அவரும் தன்னிடம் தவறாக நடந்ததாகவும் அதனால் அங்கிருந்து தனது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கை துறையூர் காவல்துறையினர் முசிறி அனைத்து மகளிர் காவல் துறைக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மாணவியின் தந்தை, நண்பர் மற்றும் உடந்தையாக இருந்த தோழி மற்றொரு நண்பர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நான்கு பேரையும் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

incident daughter trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe