Advertisment

தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகள்.!  மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

The daughter who fulfilled the promise of the father.! District Collector Praise!

Advertisment

தனது தந்தை எழுதிய உயிலின்படி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில்ரூ.50 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் நேற்று வழங்கினார்.

கடலூர் திருப்பாதிரிபுலியூர்,தேரடித் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகசுந்தரம்.வட்டாட்சியராகப் பணிபுரிந்த இவர், கடந்த 1996-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2019-ஆம் ஆண்டு நவ.17-ஆம் தேதி காலமானார்.

இவர் தனது இளைய மகள் கயல்விழிக்கு எழுதிய உயில் சாசனத்தில், "தமது நன்செய் நிலம் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரத்தை தனது மனைவி ஏ.ரமணி அம்மாளின் நினைவாக,கடலூர் வட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கயல்விழி நேற்று திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி அவர்களைச் சந்தித்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.இவருக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe