/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_168.jpg)
திசையன்விளைச் சேர்ந்தவர்கள் ஜேக்கப் சுதன் - ஞானசெல்வம் என்ற தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஜேக்கப் சுதன் கட்டிடத் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஜேக்கப் சுதன் தனது மகனுடன் தூத்துக்குடி மாவட்டம் வைரவம் கிராமத்தில் வசித்து வருகிறார். அதே சமயம் ஞானசெல்வம் தனது மகளுடன் திசையன்விளை பெட்டைகுளத்தில் வசித்து வந்தார்.
ஞானசெல்வத்தின் மகள் இடையன்குடியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சனிக்கிழமை அன்று அவர் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று தாய் ஞானசெல்வத்திடம் கூறியுள்ளார். இதனை அவரது தாய் கண்டித்து பள்ளிக்கு செல்லுமாறு கூறிவிட்டு வழக்கம்போல் தனது பணிக்காக வெளியே சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அன்று வீட்டில் தனியாக இருந்த பெண் தாய் திட்டியதால் மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை வேலையை முடித்துவிட்டிற்கு வந்த ஞானசெல்வம் தூக்கில் தொங்கியபடி இருந்த தனது மகளை பார்த்து அதிர்ச்சியடைந்த கத்தி கூச்சலிட்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)