Daughter passed away father too passed away in depression in trichy

Advertisment

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் விஸ்தரிப்பு வசந்த நகரைச் சேர்ந்தவர் ஆனந்த நாராயணன் (63). இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தேவி (62)சுற்றுலா துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களதுஒரே மகள்கடந்த 2017ம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில்இறந்துவிட்டார். அதனால் வெகு நாட்களாகமன அழுத்தத்தில் ஆனந்த நாராயணன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்தமின் விசிறியில் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.