சென்னை சைதாப்பேட்டையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஓட்டுநர் பாஸ்கர் என்பவரின் 15 வயது மகள் நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வந்துள்ளது. அடிக்கடி டிக்டாக் செய்துகொண்டிருந்தற்காகநிவேதாவை பாஸ்கர் திட்டியதாகவும்,இதனால் ஆத்திரமடைந்த நிவேதா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தில் 18 ந்தேதி நடந்த கூட்டத்தில்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் 'டிக் டாக்' செயலியை அரசு தடை செய்யப்படுமா? என எழுப்பிய கேள்விக்குடிக் டாக் செயலியை தமிழக அரசு உறுதியாக தடை செய்யும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.