Skip to main content

ஓபிஎஸ் கார் டிரைவர் மகள் தற்கொலை... டிக் டாக் வீடியோ காரணமா?

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

சென்னை சைதாப்பேட்டையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஓட்டுநர் பாஸ்கர் என்பவரின் 15 வயது மகள் நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வந்துள்ளது. அடிக்கடி டிக்டாக் செய்துகொண்டிருந்தற்காக நிவேதாவை பாஸ்கர் திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த நிவேதா தற்கொலை செய்து கொண்டதாகவும்  கூறப்படுகிறது.

 Daughter of OPS car driver commits suicide for ti tok video?


சட்டப்பேரவை கூட்டத்தில் 18 ந்தேதி நடந்த கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் 'டிக் டாக்' செயலியை அரசு தடை செய்யப்படுமா? என எழுப்பிய கேள்விக்கு டிக் டாக் செயலியை தமிழக அரசு உறுதியாக தடை செய்யும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய ஆசாமி; காப்பு போட்ட காவல்துறை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Police action on Worker who threatened women by making obscene videos

அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா (42). இவர் அங்குள்ள பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பாரதிராஜாவுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் பல பெண்களுடன் பழகி வந்துள்ளதாகவும், அவர்களுடன் தனியே இருக்கும் போது, புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து அந்த பெண்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சில பெண்கள், பாரதிராஜாவுடன் இது தொடர்பாக வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். 

அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாற, இந்த சம்பவம் குறித்து பாரதிராஜா மீது அந்த பெண்கள், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில், பாரதிராஜாவின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் ஏராளமான பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாரதிராஜாவை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.