Advertisment

''மருமகளே என் மகனிடம் பேசு...''- மாணவியை கட்டாயப்படுத்திய பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம்  

 ''Daughter-in-law, talk to my son...''- The school teacher who tied up the student has been transferred

Advertisment

தன் மகனிடம் பேச வேண்டும் என மாணவியை வற்புறுத்திய கணித ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அங்கு பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை அவருடைய மகனிடம் பேச சொல்லி வற்புறுத்தியதாகவும், மேலும் உறவுமுறை வைத்து மாணவியை மருமகள் என்று அழைத்ததோடு தனது மகனிடம் செல்போனில் பேச வேண்டும் என கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்படி பேசவில்லை என்றால் மதிப்பெண்கள் கை வைப்பேன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி மற்றும் மாணவியினுடைய பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆசிரியை சாந்தியை வேறு பள்ளிக்குபணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

teacher thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe