மாமியார் மீது வெந்நீரை ஊற்றிய மருமகள்; குமரியில் பகீர்!

Daughter-in-law pours hot water on mother-in-law

கன்னியாகுமரி மாவட்ட மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு மாதிக்காவிளையை சேர்ந்தவர் தேவராஜ் - மரியாஜோய்(67) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இளையமகன் சந்தோஷ்குமாருக்கு சைனிமோள் என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சைனிமோளுக்கும், மாமியார் மாரியாஜோய்-க்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில நாட்களில் இந்த சண்டை எல்லை மீறி போகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று மாமியார் மரியாஜோய்க்கும், மருமகள் சைனிமோளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் இருவரும் ஆபாச வார்த்தைகளை மாறி மாறி பேசிக்கொண்டு வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சண்டை முற்றிய நிலையில் மருமகள் சைனிமோள் அடுப்பில் இருந்த சுடுதண்ணீரை எடுத்து வந்து மாமியார் மரியாஜோய் மீது ஊற்றியுள்ளார். இதனால் அவர் அலறித்துடித்துள்ளார்.

மரியாஜோயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று பின் வீடுத் திரும்பினர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரியாஜோய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

daughter in law kanniyakumari police
இதையும் படியுங்கள்
Subscribe