
சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் ராஜ். இவர் அனுப்பிரியா(27) என்ற பெண்ணை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டில் ப்ரிட்ஜில் இருந்த ஐஸ்கிரீம் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்துஅஸ்வின் ராஜின் தாயார்(மாமியார்) அனுப்பிரியாவிடம் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அனுப்பிரியா மன வேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்ற அஸ்வின் ராஜ் வீட்டிற்கு வந்த போது மனைவி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார் திட்டியதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.